உலக அளவில் 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் 23,90,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,664 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக அதிகரித்து உள்ளது.
இது நேற்று 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89 ஆயிரத்து 419 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 7 ஆயிரத்து 336 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக நாடுகளில் ஜெர்மனியில்தான் நேற்று அதிகபட்சமாக 247,128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது.
ஜெர்மனியை தொடர்ந்து ரஷ்யாவில் 197,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மரணங்களில் அமெரிக்காவில்தான் அதி உச்சமாக 2,322 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்துள்ளனர்.