
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அண்மையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாலும், அதன் காரணமாக இனி பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்கும் விலைச்சூத்திரம் நடைமுறையில் உள்ளது எனவும் அதன் பிரகாரம் கட்டணத்தை அதிகரிக்காமல் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை விலைகள் அதிகரிக்கப்பட்ட போது, விலை சூத்திரத்திற்கு இணங்கவே விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.