சீனாவுடனான தீவிரமான அழுத்தங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி சுயராஜ்ய தீவான தாய்வானின் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை “நிலைப்படுத்தவும், பராமரிக்கவும் மற்றும் மேம்படுத்தவும்” பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனில் உள்ள தாய்வானின் தூதரகத்தால் கோரப்பட்ட விற்பனைக்கான அரச துறையின் ஒப்புதலை தொடர்ந்து காங்கிரஸுக்கு அறிவிக்கும் தேவையான சான்றிதழை வழங்கியதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமையின் (DSCA) அறிக்கையில் கூறியது.
2016 இல் சாய் இங்-வென் முதன்முதலாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, தாய்வானை சீனா தனது சொந்த நாடு என்று கூறி, தீவின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
தாய்வானை மீண்டும் கைப்பற்றுவதற்கான பலத்தை பயன்படுத்துவதை பீஜிங் நிராகரிக்காமல் தாய்வானின் வான்வழியில் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.