இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதேபோல், அவுஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன.
அதன்படி பெப்ரவரி 21 ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் இருந்து சில சர்வதேச மாணவர்கள் மற்றும் விசேட புலம்பெயர்ந்தோர் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.