தரமற்ற சப்பாத்துக்களைக் கொள்வனவு செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை 852,100 ரூபாவை செலுத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு 734 ஜோடி சப்பாத்துக்களை கொள்வனவு செய்ய 37 லட்ச ரூபாவை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், விநியோகஸ்தர் சப்பாத்துக்களுக்கு தேவையான விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆகியனவும் இந்த சப்பாத்துக்கள் குறிப்பீடுகளுக்கு இணங்கவில்லை என தமது அறிக்கைகளில் தெரிவித்திருந்தன.
எனினும் சப்பாத்துக்கள் கொள்வனவுக்கு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மறுப்பு தெரிவிக்காமை குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இந்த சப்பாத்துக் கொள்வனவு குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.