நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வேறு காரணங்களுக்காக ஆலோசனை கோரப்படவில்லை எனவும் இதுவொரு வழமையான செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவைக் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.