
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிப்பதாக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் இன்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவி செய்ததற்காகவும் , “சமூகங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் 14 ஏப்ரல் 2020 அன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.