
இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
இன்று காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளும் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் இன்று முதல் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.