
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக 07 பேர் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இருவர், தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (01) கையளித்தனர்.
டென்மார்க், எஸ்டோனியா, பாகிஸ்தான், காம்பியா, கசகஸ்தான், பிலிப்பைன்ஸ், ஒஸ்ரியா, ஐஸ்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கையிலிருந்தும் பிலிப்பைன்ஸ் தூதுவர் பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்தும், ஏனைய தூதுவர்கள் இந்தியாவின் புதுடில்லியிலிருந்துமே, தமது இராஜதந்திரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.