இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு (E-passport) திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டு திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் மின்னணு கடவுச்சீட்டுகள், ஏடிஎம் அட்டைகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக மலேசியாவில் குறித்த மின்னணு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பல நாடுகளில் இந்த மின்னணு கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.