கனடா தலைநகரில் கொவிட்–19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்டன பேரணியில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன சாரதிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயமாக்கின.
கனடா அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி, அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக லாரி சாரதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள், தங்களது லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவுக்குள் ட்ரக் லாரி பேரணியை நடத்தினர்.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.