
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு இன்றைய தினம் மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முற்பகல் 10.47 க்கு 200 கிலோகிராம் வெடிப்பொருள் தாங்கிய பாரவூர்தி ஒன்றினை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது, 91 பேர் உயிரிழந்ததுடன், 1,400 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 41 பேர் மத்திய வங்கியின் சேவையாளர்களாவர்.