அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் மேலதிக தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மா அதிபர் வெளிப்படுத்தியுள்ளனர்.
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டை வைத்த நபர், நாரஹேன்பிட பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும், பெல்லன்வில விகாரை வளாகத்திலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று (29) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் குறிவைத்த குண்டுகள் வெடித்திருந்தால் உயிரிழப்புகள் மட்டுமின்றி அமைதியான மக்களின் வாழ்க்கையும் சீர்குலைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கக் கூடும் எனவும், குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.