தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் “ஹரக்கடா” என்பவரால் குறித்த ஹெரோயின் தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினார்.
அந்த படகுகளிலிருந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை – குடாவெல்ல பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவ படகுகளே இவ்வாறு போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையின் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களுடன் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.