மின் துண்டிப்பை குறைக்கும் யோசனை நாளை (24) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரதுறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்றும், நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி வீதிகளில் விளக்குகளை அணைத்தல், ஏ.சி பாவனையை இடைநிறுத்துதல் மற்றும் அலுவலகங்களில் உள்ள மின் உபகரணங்களை சிக்கனமாக பாவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.