
அமெரிக்காவுக்கான விமான சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.
5G வலையமைப்பு பரிசோதனை நடவடிக்கையினை தாமதப்படுத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதை அடுத்து விமான சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
5G வலையமைப்பு தொழில்நுட்பம் காரணமாக விமான தொடர்பு அமைப்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனத் தெரிவித்து அமெரிக்காவுக்கான விமான சேவையினை எமிரேட்ஸ் நிறுவனம் இடைநிறுத்தியது.