மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று (22) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நேற்றுடன் மீள இடை நிறுத்தப்பட்டமை தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, கடந்த சில தினங்களில் பொதுமக்களின் மின்சார பயன்பாடு குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 100 மெகாவோட் மின்சார பாவனை குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரு நவமணி தெரிவித்துள்ளார்