2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்..
அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், 78, மற்றும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், 56, ஆகியோர் உள்ளனர். இருவரும் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கேள்விக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ”2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட்டால், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருப்பார் என நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் என்றார்.