
எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் 6 லட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, அந்த சீமெந்து மூடைகள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.