பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு கைக்குண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைப்பதற்காக சம்பவத்துடன் தொடர்பில்லாத ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் புதைந்து கிடக்கும் அனைத்துக் குற்றங்களின் பின்னணியிலும் கண்ணுக்குத் தெரியாத அரசியல் கரமும் பாதுகாப்பும் இருப்பதாக தெரிவித்த அவர், இவ்வாறானதொரு சூழலில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.