
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்திவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவிடமிருந்து புதிதாகக் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரளவிற்கு முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகவும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.