
2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், பணம் அச்சடிக்கும் நடைமுறை புதிய நிகழ்வு அல்ல என குறிப்பிட்ட அவர் அந்த நடவடிக்கையை தற்போது குறைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.