
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் 5,187.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.
கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் விபரங்களை பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில், பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தகவலின் பிரகாரம், 2020ம் ஆண்டு 1,875 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும், 2021ம் ஆண்டு 3,312.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும் இலங்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.