முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு சுகயீனம் காரணமாக 03 நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கை ஒன்று இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்த போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சுகயீனம் காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும் அவருக்கு 03 நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.