உள்ளூராட்சி மன்ற தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலரஞ்சலி சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியற்ற வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு விடுப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இன்று(23) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. உலகில் பொய்யுரைப்பது மூன்று வகையாக காணப்படுகிறது. பொய், தர அடிப்படையினால பொய், மற்றும் அப்பட்டமான பொய் என்று அவை வகைப்படுத்தப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிக்கு வருகை தந்து மூன்றாவது வகையான அப்பட்டமான பல பொய்களை குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கப்படவில்லை, நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்றார்.
தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் கட்டுப்பணம் செலுத்தி,வேட்பு மனுத்தாக்கல் செய்தது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு திறைச்சேரியின் செயலாளர்,அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் தடையாக செயற்படுகிறார்கள் என குறிப்பிட்டார். ஆனால் ஜனாதிபதியின் கருத்தை தொடர்ந்து தேர்தலை பிற்போடும் முயற்சியை யார் செயற்படுத்துகிறார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலர்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. ஜனநாயகத்திற்கு முரணாக செயற்படும் போது ஏற்படும் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.
நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமை பிற்போட்டதன் பின்னணியில் தான் நாட்டில் யுத்தம் தோற்றம் பெற்றது என்பதை எவரும் மறக்க முடியாது. வடக்கு மக்களின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே தலைமை தாங்கியது.
நாட்டில் மீண்டும் அமைதியற்ற தன்மையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி தற்போது முன்னெடுத்துள்ளார். தவறான வரலாற்று சம்பவத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்..” என்றார்.