உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு, நிதி வழங்காமைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலை நடத்த, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுவிக்காதிருக்க எடுத்த தீரமானத்தின் மூலம், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள், பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்மானித்து, உத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.