
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களை வட்டவலை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்தவர்கள் கொழும்பின் புறநகர் மஹரகமையில் இருந்து சிவினொலிபாத மலைக்கு சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.