
அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்தை் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என அவர் இதன்போது கூறியுள்ளார்.
நேற்றைய தினம்(15), 03 பொலிஸ் அதிகாரிகளே வழங்கப்பட்டதாக அரச அச்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 60 பொலிஸ் அதிகாரிகள் வரை தேவைப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.