ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவித்துள்ளதாக அத தெரணவிற்கு அவர் தெரிவித்தார்.
அந்த தீர்மானம் தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.வடிவேல் சுரேஷ்.
“..இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பசறை தொகுதியின் மடோல்சிமா நகரில் கூட்டத்திற்கு வருவார் என தெரிவிக்கப்பட்டது. ஆசன அமைப்பாளர் என்ற முறையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்திருந்தார். தோட்ட மக்கள் இன்று வேலையை விட்டுவிட்டு வந்திருந்தனர். ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு திடீர் சுகவீனம் காரணமாக வரமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதனால் நாங்களும் கவலைப்பட்டு தோட்ட மக்களுக்கு விளக்கமளிக்க, தோட்ட மக்கள் பூஜை செய்து சஜித் நலம் பெற வாழ்த்தினார்கள்.
மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு திரும்பி வந்த அதே நேரத்தில் சஜித் பிரேமதாச அவர்கள் முகநூலில் வெலிமடை கூட்டமொன்றில் பேசுவதைக் கண்டேன்.
அதனால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அதிர்ச்சியடைந்தேன். ஒரு உண்மையான வலி. அவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நானும் மக்களுக்கு பொய்யன் ஆனேன். அதனால் தீர்மானித்தேன். பதவி விலகினேன்..”