
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 330 ரூபாவாக குறைந்துள்ளது.
முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூ.360 ஆக இருந்தது. இதன்படி, ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 215 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.