குருணாகலில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், கையூட்டல் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாணவர் ஒருவரை பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய, குறித்த பாடசாலையின் உயர்தர கலைப் பிரிவுக்கு பொறுப்பான தலைமை ஆசிரியரே நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை உயர்தர கலைப் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்காக மூன்று இலட்சம் ரூபாவை மாணவனின் தந்தையிடம் கோரிய ஆசிரியர், அதனை பெற்றுக்கொள்வதற்காக குருநாகல் நகருக்குச் சென்ற போது, கையூட்டல் – ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் மாணவரின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஆசிரியர் குருணாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.