தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் சவேந்திர கமகே அந்த பதவியில் இருந்து நேற்று (07) இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த மருத்துவர் தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு நேற்று (07) காலை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நிறுவனத்தின் நலனுக்காக பெரும் பங்காற்றியதாகவும் சிறுபான்மை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலக தீர்மானித்ததாகவும் தலைவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டு இந்த நிறுவன ஊழியர்களின் மருத்துவ விடுப்பு கொடுப்பனவு உள்ளிட்ட அரச சேவை கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியுள்ள நிலையில், அந்த கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி இந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். தற்போதுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அந்த ஊழியர்களுக்குரிய கொடுப்பனவு சுற்றறிக்கைகள் ஒதுக்கப்பட்டதாக தலைவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.