
துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான உயிர்கள், காயங்கள் மற்றும் அழிவுகள் குறித்து துருக்கிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
துருக்கி நாட்டு மக்களுடன் இலங்கை ஐக்கியமாக இருப்பதாகவும் அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.