
புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஜனவரி 1 முதல் தொடர் மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பித்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணையம் தரவில்லை. இன்றும் கூட, நாளை அல்லது இன்று அனுமதி கிடைத்தால், நாளை முதல் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம்.”