பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
தவிர, அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் ஆரஞ்சு பழத்தின் விலை 120 ரூபாவாகவும், 100 கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 180 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு ஆரஞ்சு பழத்தின் விலை 600 ரூபாய். ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ பெல்லி 500 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபாய்.
இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழங்களின் விலை உயர்வால் பழங்கள் விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.