
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.
மற்ற மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும் விலைகளை அறிய வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ அழைக்குமாறு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.