
பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.