நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் புத்தளத்தை வந்தடைய உள்ளதாகவும், அதனை இறக்கிய பின்னர் ஆலையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பு இருக்கும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் மேலும் 10 நிலக்கரி கப்பல்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை நிலக்கரி இருப்பு போதுமானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஜெனரேட்டரை செயலிழக்கச் செய்ததன் மூலம், தேசிய மின்சார அமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது மற்றும் அந்தத் தொகையை வேறு மூலங்களிலிருந்து பெற வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE