
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீ வேர்ல்ட் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது, இரண்டு விமானங்களிலும் சுமார் 13 பேர் பயணித்துள்ளனர், மேலும் 6 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.