அடுத்தவருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் வீட்டு பணிப்பெண் தொழிலுக்கு இல்லங்களில் இருந்து யாரையும் அனுப்புவதில்லை எனவும் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை பணியகத்தின் பதிவு செய்யுமாறே நாங்கள் தெரிவிக்கிறோம் . அவ்வாறு பதிவு செய்துவிட்டு செல்வோர் அங்கு ஏதாவது பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அதில் தலையிட்டு எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியும்
5 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளின் தாய்மார் வெளிநாட்டிற்கு செல்லமுடியாது என ஒரு சட்டம் இருந்தது ஆனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்
அதனால் இந்த சட்டத்தை இன்னும் இலகுவாக்கி 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல தடைவிதித்துள்ளோம்
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டு பணிப்பெண் தொழிக்குக்கு அனுப்பாமல் இருக்க தீர்மானித்திருக்கிறோம், அவ்வாறு அனுப்புவதாக இருந்தால் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.