நேற்றைய தினம் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்ட போதிலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ‘டெய்லி சிலோன்’ செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஒரு லீட்டர் டீசல் விலையில் 10 ரூபா குறைப்பதன் அடிப்படையில் கட்டணத்தை குறைக்க முடியாது.
தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி டீசல் விலை 4 சதவீதத்தால் திருத்தப்பட்டால் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என்றார்.
டீசல் விலை சுமார் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட்டால் பேருந்துக் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தன.
அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. சிபிசி மற்றும் எல்ஐஓசி நிரப்பு நிலையங்களில் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் இப்போது ரூ.420க்கு விற்கப்படுகிறது.