வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றிய 570 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 182 முறைப்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், முறைப்பாட்டாளர்களுக்கு மோசடியான முறையில் அறவிடப்பட்ட 28,383,000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 43 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.