இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் உட்பட ரூ.37 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். பிரதமர் மோடி கடந்தாண்டு அமெரிக்கா சென்றபோது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 157 கலைப் பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள மாவட்ட நீதிபதி அல்வின் ப்ராக் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் 307 பழங்கால கலைப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் மதிப்பு சுமார் ரூ.37 கோடி,’’ என குறிப்பிட்டுள்ளார். இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாகும். இவற்றில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு, கருடனுடன் உள்ள லக்ஷ்மி சாமி சிலைகளும் அடங்கும். தற்போது, சுபாஷ் கபூர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.