வரி குறைப்பு திட்டங்களை பிரதமர் லிஸ் டிரஸ், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருவதால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். இதன்படி கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்ட மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது லிஸ்டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எம்.பி. ஒருவர் கூறியது, நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இதில் இருந்து வெளியேற வழியில்லை. ஒருவேளை லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார் என்றார்.