உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் (ஐ.இ.இ.இ.,) உள்ளிட்ட அமைப்புகளின் தரத்துக்கு உட்பட்டு தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறை
வல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.