பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் புனர்வாழ்வு பணியகத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதன் நியாயம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபக்சக்கள் புனர்வாழ்வு பணியகத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, மஹிந்த ராஜபக்சவின் மகன்கள் தமக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ராஜபக்சக்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதை தவிர்க்குமாறும் அல்லது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.