ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தற்போது அமைந்துள்ள இடத்தில் சில புவியியல் சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அது வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பாத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம் ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக வத்து சேவக சங்கமயவின் (Jathika Wathu Sevaka Sangamaya) தற்போதைய அலுவலகம் அமைந்துள்ள இராஜகிரியவில் கட்சியின் தலைமையகத்தை இடமாற்றம் செய்வதே ஆரம்பக்கட்ட முன்மொழிவு எனவும்
இராஜகிரிய காணியை முதலீட்டாளர் ஒருவரிடம் ஒப்படைத்து பல மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்து புதிய கட்டிடம் கட்டி முடித்தவுடன் இரண்டு அல்லது மூன்று மாடிகளில் சிறிகொத்தவை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.