
ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பின் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக ரஷ்ய அறிவித்துள்ளது. உக்ரைன் உடன் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய நடத்தி வரும் போரில் அவ்வப்போது உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால் ரஷ்ய அரசு கடந்த மார்ச் மாதத்திலேயே தங்கள் நாட்டிற்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவதாக கூறி ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது. ரஷ்ய ஆதரவு செய்திகளை பயனர்கள் பார்ப்பதை ஃபேஸ்புக் கட்டுப்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம், மெட்டாவின் வாதத்தை நிராகரித்தது. இந்நிலையில் மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது.