
ரஷ்யா – உக்ரைன் போர் பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டது.
இந்த இணைப்பை கண்டிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா., சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கு ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா கோரியது. ஆனால் வெளிப்படையாக நடக்க வேண்டும் என இந்தியா உட்பட 107 நாடுகள் ஓட்டளித்தன.
இதையடுத்து ரஷ்யாவின் ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே ஓட்டளித்தன. சீனா உட்பட 39 நாடுகள் ஓட்டளிக்கவில்லை.