மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை, ஜூலியா சூறாவளி தாக்கியது. இதில் 11 மாகாணங்கள் பாதிப்பை சந்தித்தன. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததை அடுத்து லாஸ் டெஜீரியாஸ் நகரில் கடந்த 8ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்துடன் மண்ணும் கல்லும் அடித்துக் கொண்டு வந்ததில், குடியிருப்பு பகுதிகள் காணாமல் போயின.
இதில், 317 வீடுகள் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டதாகவும், 750 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும், மோப்ப நாய் உதவியுடனும் தேடி வருகின்றனர்.